அரசின் விசுவாசிக்காக மடு கல்வி வலயத்தில் அதிக துஸ்பிரயோகம் –  ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

Monday, October 13th, 2025


…….
மடு கல்வி வலையத்தில் இடமாற்றத்துக்காக  ஏற்கனவே 30 பேர் இறுதி செய்யப்பட்டிருந்த நிலையில்
தற்போது வெளியாகியுள்க புதிய பட்டியலில் ஒருவர் மேலதிகமாக இணைக்கப்பட்டது விதி முறைகளை மீறிய செயல் என சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண இலங்கை அசிரியர் இடமாற்ற சங்க உறுப்பினர் காண்டீபராஜா அரசின் விசுவாசம்.மிக்க ஒருவருக்காக அதிகாரிகள் இவ்வாறு மோசடி செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் –

இடமாற்றச் சபையிலிருந்து நாம் வெளியேறியிருந்த நிலையில் (24.09.2025) ஏற்கனவே இறுதி செய்யப்பட்டிருந்த இடமாற்ற பட்டியலில் பல்வேறு மாற்றங்கள் மோசடிகள்.மேற்கொள்ளப்பட்டு புதிய பட்டியல் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளதால் தொடர்ந்தும் வெளி மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் பாதிப்பப்படுள்ளனர்.

மேலும் புதிய  இடமாற்ற பட்டியலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மோசடியை கூறுவதானால் தீவகத்தில்  25 பேர் இடமாற்றத்துக்காக இறுதி செய்யப்பட்டிருந்தனர்.
அதற்கான ஆதம் உள்ளது.
இதில் 19 பேரின் பெயர்களே இப்போது வெளிவந்துள்ளது.

அதேபோல வலிகாமத்தில் 18 பேர் இறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் 7 பெயர்களே வெளியாகியுள்ளது. ஆனால் யாழ் வலயத்தில் சரியாக நடைபெற்றுள்ளது.

மேலும்.தென்மராட்சியில் 6 பேர் இடமாற்றத்துக்காக இறுதி செய்யப்பட்டிருந்த  நிலையில் 4 பேரும் வடமராட்சியில் 7 பேர் இறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேரும் கிளி வடக்கில் இறுதி செய்யப்பட்ட 25 பேரில் 19 பேரும், கிளி தெற்கில் இறுதி செய்யப்பட்டிருந்த 44 பேரில் 35 பேரும் துணுக்காயில் இறுதி செய்யப்பட்ட 49 பேரில் 38 பேரும், அதேபோல முல்லையில் 26 பேரில் 21 பேரது பெயரும் பட்டியலில் வெளியாகிதிருந்தது.

அதேபோன்று மன்னாரில் 6 பேரில் 5 பெயர்களும், வவுனியா வடக்கில் 40 பேர் இறுதி செய்யப்பட்டிருந்தும் 32 பெயர்களும்.வவுனியா தெற்கில் 11 பேரில் 9 பெயர்களும் வெளியாகியிருந்தன.
ஏனையவர்கள் பழிவாங்கப்பட்டுள்ளனர்.

ஆனால் மடு கல்வி வலையத்தில் ஏற்கனவே 30 பேர் இருதி செய்யப்பட்டிருந்தனர்.
ஆனால் அங்கு 30 பேருக்கு பதிலாக 31 பேரது பெயர்கள் வெளிகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இங்கு அரசியல் தலையீடு செய்யப்பட்டே ஒருவரது பெயர் மேலதிகமாக இணைக்கப்பட்டு பெரும்.மோசடி இடம்பெற்றுள்ளது.

எனவே எமக்கு நீதியான தீர்வு கிடைக்க வேண்டும். என்பதற்காகவே நாம் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்.  எமக்கான நியாயம்.கிடைக்கும் வரை நாம் தொடர்ந்தும். போராடுவோம் – என்றார்.
000

Related posts: