துப்பரவு செய்யப்படாத காணிகளுக்கு விரைவில் தண்டப்பணம் அறவிடப்படும் – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Wednesday, March 27th, 2019

வேலணைப் பிரதேச சபைக்கு உட்பட்ட  தனியாருக்கு சொந்தமான துப்பரவு செய்யாத பற்றைக் காணிகளை சபை கையகப்படுத்த தீர்மானித்துள்ளதாக வேலணைப் பிரதேசசபைத் தவிசாளர் நா.கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக எதிர் வரும் மாதம் 22 ஆம் திகதிக்கு முன் வேலணை, புங்குடுதீவு, நயினாதீவு, மண்கும்பான், சரவணை அல்லப்பிட்டி ஆகிய பகுதிகளிலுள்ள தனியார் காணிகளை துப்புரவு செய்யவேண்டும் என்றும் அவ்வாறு துப்புரவு செய்யாவிட்டால் துப்புரவு செய்வதற்கு செலவழித்த பணத்தையும் தண்டப்பணத்தையும் சபைக்கு வழங்கிய பின்னரே காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் வேலணைப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பற்றைக்காணிகளில் கழிவுப் பொருட்களை வீசுவதால் மழைக்காலங்களில் டெங்கு நோய் உருவாகுவதாவும் பற்றைப் பகுதிகளில் வைத்து கால் நடைகள் இறைச்சிகள் வெட்டப்படுவதுமான சமூக விரோதச் செயற்பாடுகளும் இடம் பெறுகிறது.

ஆகவே தான் இத்தகைய செயற்பாடுகளை குறைத்துக் கொள்வதோடு இத்திட்டம் வெற்றி பெற அனைவரும் ஒத்தளைப்பு வழங்க வேண்டுமென அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts: