அமரர் கமலாதேவியின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
Tuesday, January 28th, 2025
அமரர் கமலாதேவி சச்சிதானந்தத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.
அமரர் கமலாதேவி சச்சிதானந்தம் அவர்களது மறைவுச் செய்தி அறிந்து, வருத்தம் தெரிவித்ததுடன் உரும்பிராயில் உள்ள அன்னரது இல்லத்துக்கு இன்றையதினம் சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கு தனது அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.
இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு அமரருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
அமரர் கமலாதேவி சச்சிதானந்தம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயற்பாட்டாளரும் சமுர்த்தி உத்தியோகத்தருமான சுபநாதன் அவர்களின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது






Related posts:
|
|
|


