அழிவுகளில் இருந்து மக்களை மீட்டு சிறந்த வாழ்கை தரத்தினை ஏற்படுத்துவதே எமது நோக்கம் – வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, July 16th, 2020

தமிழ் மக்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்ட அத்தனை அழிவுகளுக்கும் ஒருவகையி்ல் தானும் காரணம் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த அழிவுகளில் இருந்து மக்களை மீட்டு சிறந்த வாழ்கை தரத்தினை ஏற்படுத்தும் நோக்கிலேயே தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

வவுனியா, பூரசங்குளத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் சார்பான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலப் போராளிகளில் ஒருவன் என்ற வகையில் அத்தனை அழிவுகளுக்குமான தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக நெரிவித்த அமைச்சர் அவர்கள், மக்கள் தன்னோடு கைகோர்த்து வருவார்களாயின், எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்வதன் ஊடாக சிறந்த வாழ்கை தரத்தினை ஏற்படுத்திக் கொள்ள முடியும் எனவும் உறுதியுடன் தெரிவித்தார்.

அதேவேளை, பூரசங்குள மக்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சர் அவர்கள், உடனடியாக தீர்வு காணக்கூடிய விடயங்களுக்கு தீர்வினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டதுடன் ஏனைய விடயங்கள் தேர்தலுக்குப் பின்னர் தீர்த்து வைக்கப்படும் எனவும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


இரத்தப் பலிகளை சுமந்து நடந்த மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றுவோம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்த...
மக்கள் நலன்சார்ந்து சிந்திக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராக இருப்பது சிறப்பானது ...
இருப்பதை பாதுகாத்து மேலும் முன்னேறுவதே எமது இலக்கு - தென்மராட்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!