புலிகளின் தலைமை இல்லை என்பதால்  தமிழ் பேசும் மக்களுக்கான பிரச்சினையும் தீர்ந்துவிட்டதாக அர்த்தமல்ல – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 11th, 2016

கடந்த கால கசப்பான வரலாறுகளுக்காக தமிழ் பேசும் மக்கள்
அரசியல் தீர்வு விடயத்தில் வஞ்சிக்கப்படக்கூடாது என்பதையே  நான் இந்த சபையில் வினையமாக கேட்டுக்கொள்கிறேன்

இதே வேளை புலிகளின் தலைமை அற்றுப்போய் விட்ட  இந்த சூழலில் தமிழ் பேசும் மக்களுக்கு இனி பிரச்சினைகள்  எதுவும் இல்லை என்ற தொனிப்பொருளில் சிலர்  பேச முற்படுகிறார்கள்.

புலிகளின் தலைமை தனித்தமிழ் இராட்சியமொன்றை  இலக்காக கொண்டிருந்த நிலையிலும்,…
அன்றில் இருந்தே நான் அடிக்கடி ஒரு  விடயத்தை வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

புலிகளின் தலமையின் பிரச்சினை என்பது வேறு!
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை என்பது வேறு!!

இதையே நான் அன்று தொலை தூரப்பார்வையில் கூறிய போது  பலரும் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை.

இன்று புலிகளின் தலைமை இல்லை என்ற காரணத்தை  வைத்துக்கொண்டு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையும் முடிவிற்கு  வந்து விட்டதாக யாரும் கருதிவிடக்கூடாது.  இதை நான் இந்த சபையில் வலியுறுத்தி கூற விரும்புகிறேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்ட இறுதிநாள் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

sri-lanka-parliament-budget-860 copy

Related posts:

தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவா...
வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை விசாரணைகளுக்கு என்ன நடந்தது :  கண்கண்ட சாட்சியாக நானே இருக்கிறேன் – ந...
மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த ஆனந்தராசாவின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபா இழப்பீட்டு தொகை...

வேலணை வைத்தியசாலையை தள வைத்திசாலையாக தரமுயர்த்த வேண்டும் -நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத...
போதைப் பொருள் கடத்தல்காரர்களின் விபரங்கள் காணாமல் போனதா? காணாமல் ஆக்கப்பட்டதா - நாடாளுமன்றில் டக்ளஸ்...
நந்திக்கடல் ஆளமாக்கப்பட்டு கடற்றொழிலாளர்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் – ...