யுத்தகாலத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு விரையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Friday, May 29th, 2020

இலங்கையில் நடைபெற்ற யுத்தகாலத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் கோரிக்கைவிடுத்துள்ளார்.

யுத்தம் நிறைவடைது 10 வருட்ங்கள்’ கடந்துவிட்டது இக்காலப்பகுதியில் காலப்பகுதியில் இடையூறுகளுக்கும் அழுத்தத்திற்கும் உள்ளான தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இதுவரை நிவாரணங்கள் கிடைக்காத நிலையில் தமிழ் ஊடகவியலாளர்களும் அவர்களது குடும்பங்களும் இன்னமும் பல்வேறு அசௌகரியங்களுடனேயே உள்ளனர்.

இந்நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களது வாழ்வியல் நலன்கருதி நிவாரணங்களை துரிதகதியில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அமைச்சரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

எமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் - பளை நகரப் பகுதி வர்த்தகர்கள் டக்ளஸ் எம்.பி.யிடம் கோ...
தமிழரின் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளித்தது இந்திய அரசு - இந்திய விஜயம் தொடர்பில் செயலாளர் நாயகம் டக...
மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்திய எழுதாரகை படகை அப்புறப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!