பொது அமைப்புக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, April 3rd, 2021

மக்களைப் பாதிக்கும் வகையிலான எந்தவகையிலான செயற்பாடுகளையும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேற்கொள்ளப்படுகின்ற அனைத்துச் செயற்பாடுகளும் சட்ட ரீதியானதாக இருப்பதை அனைவரும் உறுதிப்படுததிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போது மேற்குறித்தவாறு தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், அனைவருக்கும் கௌரவான வாழ்வை உறுதிப்படுத்துவதே எனது நோக்கம் எனவும் தெரிவித்தார்.

பொது அமைப்புக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவற்றிற்கு நியாயமான தீர்வினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, கிளிநொச்சி மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கம், கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வு சங்கம் உட்பட பல்வேறு பொது அமைப்புக்களின் பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைசார் தரப்பினருக்கும் அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அராசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கரைச்சி, கண்டாவளை ஆகியவற்றின் பிரதேச செயலாளர்கள் உட்பட சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்

Related posts:

வடக்கில் எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் தொடர்பான சிகிச்சைகளுக்கு நவீன தொழில்நுட்ப சாதனங்களின் தேவைப்பாடு...
சலுகைகள் வேண்டாம்: எமது மக்களுக்கு வளங்களை மீள ஒப்படைத்தால் போதும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலி...
கசப்பான சம்பவங்களுக்கு மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை மட்டும் பரிகாரமாகாது – டக்ளஸ் எம்.பி சுட்ட...