நிரந்தர மருத்துவர்கள் நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்க  வேண்டும் – அல்லைப்பிட்டி மக்கள் டக்ளஸ் எம்.பியிடம் கோரிக்கை!

Sunday, January 28th, 2018

அல்லைப்பிட்டி மருத்துவமனையில் நிரந்தர மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் நாளாந்தம் நாம் பல்வேறுபட்ட நெருக்கடிகளை சந்திக்கவேண்டியநிலையை எதிர்கொள்வதாக வேலணை வெண்புறவி கிராம் மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளனர்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு வேலணை வெண்புறவி பகுதியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –

குறித்த மருத்துவ மனையில் நீண்டகாலமாக நிரந்தர மருத்துவர்கள் இல்லாத நிலையில் நாம் சாதாரண நோய்களுக்குக் கூட வேறு இடங்களுக்கு சென்று சிக்கிச்சை பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்க தள்ளப்பட்டுள்ளோம்.

இந்த அவல நிலையை நீக்கி எமது பகுதி மருத்துவமனைக்கென நிரந்தர மருத்துவர் ஒருவரை நியமித்து தாம் சிகிச்சைகளை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கான சூழலை உருவாக்கித் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன் எமது பகுதி எதிர்கொண்டுவரும் தேவைப்பாடுகளான வீதிப்புனரமைப்பு வீதி விளக்கு பொருத்தல், புதிதாக குளம் ஒன்றை நிர்மாணித்தல், வீடமைப்பு, சமுர்த்தி பயனாளிகளை திட்டத்தில் உள்வாங்கல் உள்ளிட்ட விடயங்களிலும் உரிய கவனம் செலத்தவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மக்களது கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய டக்ளஸ் தேவானந்தா மக்களுக்கான தேவைகள் எப்போதுமே இருந்து கொண்டிருந்தாலும் அவற்றில் முன்னுரிமை அடிப்படையில் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுத் தருவதற்கு எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததுடன்

உங்களது நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் நிச்சயம் நாம் ஈடேற்றுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Related posts:


ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தேசிய மாநாடு குறித்து தோழர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய ஆசிச்செ...
அர்ப்பணிப்போடும் உழைக்கும் அரசியல் தலைமைகளை தெரிவுசெய்யவதனூடாகவே  மக்கள்  மேம்பாட்டை காணமுடியும் - ட...
கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டு வரும் கலைக் கூடத்தின் வேலைகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் அ...