அமைச்சரவை அனுமதியுடன் சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் –- டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Friday, April 2nd, 2021

வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களாக நிரந்தர நியமனமின்றி சேவையாற்றுவோரை ஒரு இலட்சம் இளையோருக்கு அரச தொழில் வழங்கும் திட்டத்துக்கு உள்ளீர்த்து நிரந்தர நியமனம் வழங்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர், கலாநிதி பீ.பி.ஜயசுந்தரவுக்கு இந்த பணிப்பை ஜனாதிபதி வழங்கினார்.

நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களின் கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனைத் தெரித்துள்ளார்.

வடக்கு வைத்தியசாலைகளில் சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றியவர்களுக்கு மாகாண சுகாதார அமைச்சினால் நிரந்தர நியமனம் வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக நியமனம் இடைநிறுத்தப்பட்டது.

இதையடுத்து தமக்கான நிரந்தர நியமனத்தை இடைநிறுத்தி அநீதி இழைக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்ததுடன், வடமாகாண ஆளுநரின் செயலகம் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்பதாக இந்த விடயம் தொடர்பாக பல்வேறு உயர்தரப்பினருடன் கலந்துரையாடி வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம்  ஜனாதிபதியுடன் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் அவர்களது பிரச்சினை தொடர்பில் தீர்வை தருமாறு கோரியிருந்தார்.

அத்துடன் அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த சுகாதார தொண்டர்கள் தமது நியமனம் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்தனர்.

இந்நிலையிலேயே நேற்றையதினம் அமைச்சரவை கூட்டத்தின்போது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவின் “சுபீட்சத்தின் நோக்கு செயற்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தில் குறித்த சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர், கலாநிதி பீ.பி.ஜயசுந்தரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கைவேலி ஸ்ரீமுறுகண்டிப் பிள்ளையார் ஆலயத்தின் கருவறைக்கான அடிக்கல்லை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ...
எங்களின் இரத்தம் சிந்தியபோது தமிழக மக்களின் இரத்தம் கொதித்ததை நான் மறக்கவில்லை - அமைச்சர் டக்ளஸ் தேவ...
தொல்லியல் செயற்பாடுகள் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!