உழைப்பவர் தினத்தில் உரிமைகள் பெற்றிட உறுதி கொள்வோம் – மேதின செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Monday, April 30th, 2018

உழைக்கும் மக்கள் உரிமைக்காக எழுச்சி கொண்ட உலகத்தொழிலாளர் தினத்தில் சகல உரிமைகளும் பெற்றிட நாம் உறுதி கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயககட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள மேதின செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த செய்தியில்-

நாம் எமது தேச விடுதலைக்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் எழுச்சி கொண்ட ஓர் தேசிய இனம். நீதியான எமது ஆரம்பகால உரிமைப்போராட்டத்திற்காக ஒரு தேச விடுதலை இயக்கத்தையே நாம் வழிநடத்தி சென்றவர்கள். நாம் மக்களுக்காக இரத்தம் சிந்தியவர்கள். மாபெரும் அர்ப்பணங்களை ஆற்றியவர்கள். தேசத்திற்காக தியாகங்களை ஏற்றவர்கள்.

ஆனாலும், எமது உரிமைப்போராட்டம் அழிவு யுத்தமாக மாறிய ஆபத்தை உணர்ந்து,.. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் எமது மக்களின் உரிமையை வெல்லும் பாதையை தீர்க்கதரிசனமாக மாற்றிக்கொண்டவர்கள்.

அழிவு யுத்தம் ஒழிந்து இன்று ஒன்பது ஆண்டுகள் கடந்து போன நிலையிலும்,… நாம் எதற்காக போராடப்புறப்பட்டோமோ அதற்கான நியாங்களுக்கு இன்னும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.

எம்மிடம் இன்று இருப்பது எமது மக்களின் உரிமைகளை வெல்வதற்கான மனவுறுதியும் ஆத்ம பலமும் மட்டுமே. இவைகள் மட்டும் இருந்தால் போதாது.

மக்களின் ஆணையும் எமக்கு கிடைத்தால் மட்டுமே எமது மக்களின் உரிமைகளை நாம் வென்றெடுக்க முடியும். இது வரை மக்களின் ஆணையை பெற்றவர்கள் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதில் தவறிழைத்தே வந்துள்ளார்கள்.

தேசியம், சுயநிர்ணய உரிமை,. தன்னாட்சி,.. என்பன வெறுமனே பேசிக்கொண்டிருப்பதற்கான விடயமல்ல. வெறும் தேர்தல் கோசங்களும் அல்ல. இவைகள் அடைந்தே தீர வேண்டிய எமது மக்களின் உரிமை. வெற்றுக்கோசங்களிலும், தேர்தல் வாக்குறுதிகளிலும் வெறுமனே எமது மக்கள் மயங்கி கிடக்கும் நிலை இன்று மாற்றம் கண்டு வருகிறது.

எமது மக்கள் முழுமையாக விழித்தெழும் காலம் வெகு தூரம் இல்லை. அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வு, அபிவிருத்தி,. அரசியலுரிமை,. அரசியல் கைதிகளின் விடுதலை,. எஞ்சிய நிலங்கள் மீட்பு, காணாமல் போனோரின் உறவுகளின் துயர் துடைப்பு, எமது சொந்த நிலத்தில் உழைக்கும் மக்களின் சுதந்திர உரிமை,… இவைகளை வென்றெடுக்க மக்கள் எமக்கு வழங்கும் ஆணைக்கு நாம் காத்திருப்போம். அதற்காக உறுதியுடன் உழைப்போம்.

இவ்வாறு தனது மேதின செய்தியில் தெரிவித்திருக்கும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது மக்களின் சகல உரிமைகளையும் வென்றெடுக்க சக தமிழ் கட்சிகளையும். பொது அமைப்புகளையும் மற்றும் தொழிற்சங்கங்களையும் முரண்பாடுகளுக்கு அப்பால் ஓரணியில் திரண்டு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

12

Related posts:

தமிழரின் வழக்குகள் நிலுவையில் கிடக்கின்றன - நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார் டக்ளஸ் தேவானந்தா!
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வா தாரத்தை மேம்படு த்துவதில் நாம் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகினறோம்...
அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சநிலை தேவையற்றது – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவ...

அர்ப்பணிப்போடும் உழைக்கும் அரசியல் தலைமைகளை தெரிவுசெய்யவதனூடாகவே  மக்கள்  மேம்பாட்டை காணமுடியும் - ட...
133 மில்லியன் வரிப்பணத்தை வட மாகாணசபைக்கு விடுவித்துக் கொடுங்கள்  - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி!
சுயபொருளாதாரத்திற்கு தடையாக இருப்பவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே - குமுழமுனை மக்கள் ஆதங்கம்!