மாணவர்களை விஞ்ஞான மற்றும் தொழிற்நுட்ப ரீதியாக ஈர்க்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, November 26th, 2016

விஞ்ஞான தொழில் நுட்பத்துறை என்பது ன்றைய உலகில் இன்றிமையாத ஒரு விடயமாக மாற்றம் பெற்றுள்ளது. இதனை நாம் பாடசாலை மட்டங்களிலிருந்து, மிகுந்த நுட்பத்துடன் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வகையில் இதற்கான நடவடிக்கைகளை இந்த அமைச்சு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்

இன்றைய நிலையில் எமது நாட்டில் விஞ்ஞான, தொழில்நுட்பப் பாடங்களை பாடசாலைகளில் கற்பிப்பதற்கான பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான பற்றாக் குறை நிலவுவதை நாம் நன்கறிவோம்.

ஆகவே இந்த நிலையை தொடர்ந்து எமது நாட்டில் நீடிக்க விடாமல்இப்போதிருந்தே அதற்கான அடித்தளமாக பாடசாலை மட்டங்களில் இருந்தே விஞ்ஞான தொழில்நுட்பப் பாடங்களை பயிற்றுவிக்கக் கூடிய திட்டங்களை கல்வி அமைச்சுடன் இணைந்து கௌரவ அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் அவர்கள் இந்த அமைச்சின் ஊடாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என நான் நம்புகின்றேன்.

இதற்கு வசதியாகப் பல பாடசாலைகளில் விஞ்ஞான தொழில்நுட்ப பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த வசதிகளை கொண்டிராத பாடசாலைகளுக்கும் அந்த வசதிகளைக் கல்வி அமைச்சு ஏற்படுத்திக் கொடுக்க முன்வருவது அவசியமாகும்.

அதே நேரம் மாணவர்களை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பாடங்களின்பால் ஈர்ப்பதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும்,  சிறந்த அறிவும், ஆற்றலும், அக்கறையும் உள்ள அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் அவர்கள் மேற்கொள்வார்கள் என நம்புகின்றேன்.

அதே நேரம் பல்கலைக்கழக மட்டங்களிலும் இந்த விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளைப் பரவலாக்க முடியுமென நான் நம்புகின்றேன். அதற்கான வளங்களையும், நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கும் பட்சத்தில் பல்கலைக்கழக மட்டங்களில் இந்த முயற்சிகளை முன்னெடுக்க முடியுமென நான் எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

003

Related posts: