இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, November 6th, 2018

யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக பல்வேறு இழப்புக்களைச் சந்தித்த மக்களின் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு நடைபெறும் என   மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி காலை 9 மணிக்கு மாவட்ட செயலகத்தில்  320 பேருக்கும் , கிளிநொச்சியில்  பகல் 10.30 மணிக்கு கூட்டுறவு மண்டபத்தில்  300 பேருக்கும்  ,யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் 170 பேருக்குமான இழப்பீட்டுக் காசோலைகள் 2.00  மணிக்கும் திட்டமிட்டபடி வழங்கி வைக்கப்படவுள்ளது

எனவே காசோலைகளைப் பெற்றுக்கொள்ள அழைக்கப்பட்டுள்ள பயனாளிகள் குறித்த நேரத்திற்கு குறிப்பிட்ட இடத்திற்கு வருகைதந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.  அதேவேளை இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து தேவைகள் மற்றும் கோரிக்கைகளுடன் சந்திக்க வரும் மக்களையும் சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related posts:

டக்ளஸ் தேவானந்தாவை எமது உயிருள்ளவரை மறக்கமாட்டோம் - காணாமல்போய் மீண்டுவந்து நன்றி கூர்ந்த கடற்றொழிலா...
நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடருவதற்கு நீங்கள்தான் காரணம்: மக்கள் மீது குற்றச்சாட்டினார் அமைச்சர் ...