அமைச்சர் பவித்ராவுடன் காணப்பட்ட இணக்கப்பாட்டிற்கேற்ப உடனடி நடவடிக்கைகளை எடுங்கள் – அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Friday, December 1st, 2023

வன பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது பிரதானமாக ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பாக குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட நெக்டா நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடியுள்ளார்..

இதன்போது வன பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் கீழான திணைக்களங்களினால் தடைகளை அல்லது தாமதங்களை எதிர்கொண்டுள்ள இடங்கள் மற்றும் குளங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதற்காக அமைச்சர்களுக்கிடையே காணப்பட்ட இணக்கத்திற்கேற்ப உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்..

இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் நெக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் உதவிப் பணிப்பாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

முன்பதாக வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைக்குமிடையே இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின்போது களப்பு மற்றும் குளங்களில் மீன் வளர்ப்பு மற்றும் மீன்பிடிப்பில் ஈடுபடுவதில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன்போ குறிப்பாக வனபாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற குறித்த சந்திப்பின்போது குறித்த நீர் நிலைகளில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு வனபாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் அதிகாரிகளால் ஏற்படுத்தப்படும் தடைகள், நெருக்கடிகள் தொடர்பாக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெளிவு படுத்தியிருந்தார்.

அத்துடன் அவ்வாறான இடர்களை தளர்த்தி மீன்பிடித் தொழிலாளர்களுக்கு வசதியை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்திருந்தாரர்.

மேலும் மீன் மற்றும் இறால் வளர்ப்புக்கு தோதான இடங்களாக கடற்றொழில் அமைச்சினால் அடையாளம் காணப்பட்டுள்ள இடங்கள் சிலவற்றில் குறித்த அமைச்சின் கீழான திணைக்களத்தின் தலையீடுகள் தடைகளை அகற்றி உற்பத்தியை மேம்படுத்த  விரைவான தீர்வு காணப்படுவதன் தேவையையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எடுத்துரைத்திருந்தார்.

இந்நிலையிலேயே பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதற்காக அமைச்சர்களுக்கிடையே காணப்பட்ட இணக்கத்திற்கேற்ப உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

பொங்கல் திருநாள் தமிழர்களுக்கு - புது வழியைப் பிறக்கச் செய்யட்டும் - தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியி...
வடக்கு – கிழக்கில் ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கான தலைவர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்?...
சிறுகடற்றொழிலாளர்களை பாதுகாக்க ஒத்துழையுங்கள் - சர்வதேச அமைப்புக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

கிடைக்கப் பெறுகின்ற வாய்ப்புகளை மக்களுக்காக பயன்படுத்திச் சாதித்துக் காட்டியவர்கள் நாங்கள் - டக்ளஸ் ...
சூரிய மின் உற்பத்தி தொடர்பில் மக்கள் ஏன் ஈடுபாடு காட்டவில்லை என்பது தொடர்பில் எப்போதாவது ஆராய்ந்து ப...
வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் அலுவலகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்ப...