சூரிய மின் உற்பத்தி தொடர்பில் மக்கள் ஏன் ஈடுபாடு காட்டவில்லை என்பது தொடர்பில் எப்போதாவது ஆராய்ந்து பார்த்தீர்களா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, March 29th, 2019

தேசிய மின் கட்டமைப்புக்கு புறம்பாக சூரிய சக்தி வலுவைப் பயன்படுத்துவது தொடர்பில் கடந்த வரவு – செலவுத் திட்டத்தின்போது பிரஸ்தாபிக்கப்பட்டது. குறைந்த அளவில் மின் பாவனையை மேற்கொள்கின்ற வீடுகள் இனங்காணப்பட்டு, இரண்டு லெட் மின்குமிழ் வீதம் கொடுக்கப்படும் எனவும் அரச தரப்பில்  கூறப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களுக்கும் என்னவாயிற்று? என்பது தெரியாது. அதாவது, இந்த நாட்டில் அவ்வப்போது நெருக்கடிகள் ஏற்படுகின்ற நிலையில் அவற்றுக்கு தீர்வாக கூறப்படுகின்ற வசீகரமான வார்த்தைகள் யாவற்றையும் பின்னர் படிப்படியாக காற்றிலே பறக்கவிடுவது வழக்கமாகியே விட்டது என ஈழ மக்கள்; ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்;தா தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு, மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்iகில் –

லெட் மின்குமிழ் பயன்பாட்டினை இந்த நாட்டில் பரவலாக்குவதற்கான ஏற்பாடுகளை ஒழுங்குரீதியில் மேற்கொண்டிருக்கலாம். அப்படி செய்திருந்தால் இன்று இந்த நெருக்கடி நிலைமை தோன்றியிருக்காது.

சூரிய மின் வலு புரட்சியொன்றை ஏற்படுத்தப் போவதாகக் கூறப்பட்டது. புதுப்பிக்கத்தக்க வலு என்றொரு அமைச்சும் மின்வலு அமைச்சுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. நூற்றுக்கு எட்டு வீத வட்டிக்கு மூன்றரை இலட்சம் ரூபா கடனாகக் கொடுக்கப்படும் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. இருந்தும் உங்களது சூரிய சக்தி மின்வலு உற்பத்தி சார்ந்து மக்கள் ஏன் ஈடுபாடு காட்டவில்லை என்பது பற்றி நீங்கள் எப்போதாவது ஆராய்ந்து பார்த்தீர்களா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

அந்த எட்டு வீத வட்டியையும், தவணைக் கொடுப்பனவுகளையும் கொடுத்து முடிக்கும் போது, சாதாரண மக்களுக்கு 25 வருடத்திற்கும் மேலாக மின் கட்டணத்தை செலுத்தி விடலாம் என்பதால் சாதாரண மக்கள் அத்திட்டம் தொடர்பில் திரும்பியும் பார்க்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த சூரிய வலு மின்னுற்பத்திக்கான உபகரணங்களை கொண்டு வந்து விநியோகஞ் செய்கின்ற 230 நிறுனங்கள் அனுமதி பெற்ற நிறுவனங்களாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த நிறுவனங்களும் மக்களுக்கு பணி செய்வதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. ஆனாலும், அதிக விலை கொடுத்து நாம் ஏன் நட்டமடைய வேண்டும்? என மக்கள் நினைக்கின்றார்கள். சூரிய வலு மின் உற்பத்தி தொடர்பில் உங்களுக்கு அதிக அக்கறை இருப்பின்? அதனது உபகரணங்களுக்கான வரியை உங்களால் குறைக்க முடியாதா? என்ற கேள்வி எழுகின்றது.

இலங்கை மக்களின் சூரிய ஒளி மூலமான மின் தேவையினை பூர்த்தி செய்யும் பொருட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியானது 50 அமெரிக்க டொலர் மில்லியன் நிதியினை குறைந்த வட்டிக்கு அனுமதித்திருந்ததாகக் கூறப்பட்டது. கோரிக்கை விடுத்திருந்தால் அதனை 200 அமெரிக்க டொலர் மில்லியன் வரையில் அதிகரிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

இந்தக் கடனை விரைவாக மக்களுக்கு கிடைக்கக்கூடிய வகையிலும், மக்களை ஆர்வமூட்டுகின்ற கடன் திட்டமாகவும் மாற்றியிருந்தால், இன்று இந்த நாட்டில் மின்சாரத்திற்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனக் கூறப்படுகின்றது.

நாட்டுக்குக் கிடைத்திருந்த இந்த நிதியை அரசு தனது தேவைக்குப்  பயன்படுத்திவிட்டு, இன்று மின் வெட்டை அமுல்படுத்தி வருகின்றது என்ற குற்றச்சாட்டையே பலரும் முன் வைக்கின்றனர்.

Related posts:

நாட்டில் உற்பத்திகளுக்கு வரி விதிப்பதற்கு முதல் உற்பத்தி முயற்சிகளைப் பாதிக்கின்ற காரணிகள் அகற்றப்பட...
மத ரீதியான தூண்டுதல்கள் இன ஐக்கியத்தை சீர்குலைக்கும் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவிப்பு!
தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் சமூக பொருளாதார மாற்றங்கள் உருவாக வேண்டும் – அதையே தான் விரும்புவதாக அ...