அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் முல்லை மாவட்டத்தில் பொருளாதார மேம்பாடு – துறைசார் தரப்பினருடன் அமைச்சர் கலந்துரையாடல்!

Wednesday, April 17th, 2024

அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குறித்த நிறுவனஙகளின் பிரசன்னத்துடன் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின்போது மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மக்கள் நலன்சார் திட்டங்கள் மற்றும் மாணவர்களின் கல்வி, வறிய மக்களின் வாழ்வாதார மேம்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக குறித்த நிறுவனங்கள் தாம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளின்போது எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரிடம் எடுத்துக் கூறியிருந்ததுடன் அவற்றை சீர் செய்வதாற்கான பொறிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டது..

இக்கலந்துரையாடலில், ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் ,முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், மற்றும் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் துறைசார் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்  என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: