தென்னிலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் கடற்றொழில் கிராமங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் – பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்வு!

Saturday, October 29th, 2022

வீரவல பகுதியில் அமைந்துள்ள வடகடல் நிறுவனத்தின் வலை உற்பத்தி தொழிற்சாலையை வருமானம் ஈட்டித் தருகின்ற நிறுவனமாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வீரவல வலை உற்பத்தி தொழிற்சாலைக்கு கண்காணிப்பு விஜயத்தினை இன்று மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக, அவர்களுடன் கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சுமார் 57 பணியாளர்கள் கடமையாற்றி வருகின்ற குறித்த தொழிற்சாலைக்கான வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கட்டிடங்களின் கூரையில் சூரியக் கலங்களை பொருத்துவது தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

அம்பலாந்தோட்டையில் தனியார் முதலீட்டாளர்களினால் முன்னெடுத்துச் செல்லப்படுகினாற பாரிய உல்லாசப் படகு கட்டும் தொழிற்சாலையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த தொழிற்சாலை மூலம் மீன்பிடித் துறைக்கு பெற்றுக்கொள்ளக் கூடிய ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் ஆராய்ந்தார்

இதேவேளை தங்காலை மீன்பிடித் துறைமுகத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாகஅறிந்து கொள்வதற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றினையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அனைத்து விதமான பிரச்சினைகளையும் குறுகிய காலத்தினுள் தீர்ப்பது நடைமுறைச் சாத்தியமற்றது. எனினும், ஒவ்வொரு விடயங்களாக முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைப்பதன் மூலம் சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

தென்னிலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் கடற்றொழில் கிராமங்களுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தங்காலையில் தனியார் ஒருவரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சுழியோடிகளுக்கான நிலையம் ஒன்றினை பார்வையிட்டு, குறித்த தொழில் முயற்சியை உற்சாகப்படுத்தியதுடன், கடற்றொழில் அமைச்சு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கும் எனவும் உறுதியளித்தார்.

குறித்த சுழியோடிகளுக்கான நிலையத்தின் மூலம் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், சுழியோட விரும்புகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு சேவையையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

மீன்பிடித் துறைமுகத்தின் உட்கட்டுமானங்களை சீர்யெ்து செய்து தருமாறு குடாவெல்ல மீன்பிடிக் துறைமுகத்தினை பயன்படுத்தி வருகின்ற கடற்றொழிலாளர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சுற்றுப் புறத்தினை காப்பெற் மூலம் செப்பனிடுதல், மலசல கூடத்தினை சீர்செய்தல், கண்காணிப்பு கமெரா பொருத்துதல், கழிவுகளை அகற்றுதல், எரிபொருள் பம்பிகளை சீரமைத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

கிளிநொச்சியை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியதுபோல் மக்களது வாழ்வியலையும் பலப்படுத்து வேன் - டக்ளஸ் தே...
நிலையற்றதொரு ஆட்சியின் பிரதிபலிப்புகளை இந்த நாட்டு மக்கள் வீதிகளில் அனுபவிக்கின்றனர் – டக்ளஸ் எம்.பி...
வடக்கு மக்களுக்கு 50 இலட்சம் பெறுமதியான வீடுகள் வழங்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் மாவட்ட ச...

வெலிக்கடைப் படுகொலைக்கு நியாயம் வேண்டும் : நானே சாட்சியாகிறேன் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரிக...
இரணைமடு நீர்ப்பாசன திணைக்கள ஒதுக்கீட்டுக் காணியில் பயிர் செய்யும் விவசாயிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவா...
வடக்கில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்ய ஒசன்பிக் தனியார் நிறுவனத்துடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையா...