அங்கீகரிக்கப்படும் முறைப்படி மாகாணசபைத் தேர்தல்களை நடத்தத் தயார் – தேர்தல் ஆணைக்குழு!
Friday, May 22nd, 2026நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் முறைப்படி மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் முன்னிலையாகியிருந்த போதே இந்த நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்களிப்புடன் இக்கூட்டம் நேற்று (22) நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளும் இக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் காணப்படும் சட்ட ரீதியான தடைகளை விவரிக்கும் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது
Related posts:
யாழ். துன்னாலை வன்முறைச் சம்பவம்: 39 பேரின் விளக்கமறியல் நீடிப்பு
நேட்டோவில் சேர்வதன் மூலம் ரஷ்யாவின் நலனுக்கு எதிராக செயற்பட்டதால் போர் மூண்டது - உக்ரைனை ஆக்கிரமிக்...
உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிரான மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர், உயர் நீதிமன்ற...
|
|
|


