உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிரான மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை !
Thursday, July 27th, 2023
உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மார்ச் 9 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால், அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி தேசிய மக்கள் சக்தி மற்றும் பெப்ஃப்ரல் அமைப்பு என்பன மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல் உரிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மேலதிக மன்றாடியார் நாயகம் பிரியந்த நாவான தெரிவித்தார்.
இந்த நிலையில் மனுக்கள் மீதான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஆரம்ப சுகாதார சேவையைப் பலப்படுத்தும் வேலைத்திட்டம்!
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - வர்த்தக அமைச்...
விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் மினுவாங்கொடையில் குற்றக் கும்பலைச் ...
|
|
|
உங்களது கோரிக்கையை நிறைவுசெய்ய முயற்சிக்கின்றேன் – முன்னாள் காரைநகர் பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவர்...
சுற்றுச்சூழலுக்கு 48 மணித்தியாலங்கள் - உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல்துறை அமைச்சு வ...
யாழ்ப்பாணத்தில் வழமையான செயற்பாடுகளுக்கான எரிபொருளை மாத்திரம் விநியோகிக்குமாறு மாவட்ட செயலர் அறிவுறு...


