ஆரம்ப சுகாதார சேவையைப்  பலப்படுத்தும் வேலைத்திட்டம்!

Friday, April 27th, 2018

தொற்று நோய் மற்றும் இனங்காணப்பட்ட தொற்றா நோய்களை கட்டுப்படுத்த ஆரம்ப சுகாதார சேவையில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இதனால் இலங்கையில் ஆரம்ப மட்டத்தில் சுகாதார சேவை வசதிகளை அபிவிருத்தி செய்வது காலத்தின் தேவையாக இனங்காணப்பட்டுள்ளது. அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ‘முழு சுகாதாரகாப்புறுதியினை அடிப்படையாகக் கொண்ட சுகாதார சிகிச்சை வழங்கும் கொள்கையினை செயற்படுத்துவது’ தொடர்பில் அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், குறித்த வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்காக உலக வங்கியினால் சலுகை நிபந்தனைகளின் கீழ் பெற்றுத் தருவதற்கு இணங்கியுள்ள 200 மில்லியன் அமெரிக்கடொலர்களை பயன்படுத்தி, சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு ஆகியவை இணைந்துமுன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன வழங்கிய ஆவணங்களுக்குஅமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts: