அவதானமாக இருங்கள் – நெடுந்தீவு மக்களுக்கு வைத்திய அதிகாரிஅ அறிவுறுத்து!
Wednesday, November 26th, 2025
…
நிலவும் அசாதாரன காலநிலை மாற்றம் காரணமாக
நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து கடல்வழியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயளர்களை இடமாற்றீடு செய்ய முடியாத நிலை
ஏற்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளதாக நெடுந்தீவு வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
எனவே நெடுந்தீவு மக்கள் அனைவரையும் விபத்துக்கள், பாம்புகடி மற்றும் தவிர்க்ககூடிய நோய்நிலைகளை குறைத்து வீடுகளில் அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது
இதேவேளை காலநிலை சீரின்மை காரணமாக நெடுந்தீவுக்கான நோயாளர் கடற் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் நெடுந்தீவு வைத்திய அதிகாரியினால் நோயாளிகளை யாழ்ப்பாணத்திற்கு மேலதிக சிகிச்சைக்காக வான் வழியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ரஷ்ய அரசாங்கம் உணவுப்பொருட்கள் உதவு!
நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா அவர்களும் சுமந்திரன் அவர்களும் கலந்து கொள்ளும் பகிரங்க வி...
பாடசாலைகளை தனிமைப்படுத்தல் மையங்களாக்குவது பொருத்தமாக அமையாது - ஜனாதிபதியுடன் அமைச்சர் டக்ளஸ் தேவான...
|
|
|


