சிரேஷ்ட கலைஞர்களுக்கான மருத்துவ காப்புறுதித் திட்டம்!

Tuesday, March 27th, 2018

நாட்டிலுள்ள சிரேஷ்ட கலைஞர்களுக்கு புதிய அவசர மற்றும் மருத்துவ காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்த டவர் ஹோல் அரங்கு மன்றம் தயாராகி வருகிறது.

இந்த காப்புறுதித் திட்டம் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும்.

இதற்காக ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அந்த மன்றம் தெரிவித்துள்ளது.

மேடை நாடக துறையுடன் சம்பந்தப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். அரசாங்கம் வழங்கும் ஏனைய காப்புறுதி திட்டங்கள் மூலம் பயனடைபவர்கள்இதற்காக விண்ணப்பிக்க முடியாது.

குறைந்த பட்சம் இந்தத் துறையில் 20 வருடங்கள் ஈடுபட்டிருத்தல், கலாபூஷணம் அல்லது அது போன்ற அரச மட்டத்திலான கௌரவ விருதுகளைப் பெற்றவர்கள், தேசிய மட்டத்தில் பிரபல நாடகவிழாக்களில் பங்கேற்று அரச விருதைப் பெற்றிருத்தல் என்பன இதற்கான தகைமைகளாகும்.

இதற்கான விண்ணப்பப்படிவங்களை பதிவுத் தபால் மூலம் பணிப்பாளர் நாயகம் டவர் ஹோல் அரங்க மன்றம் சௌசிறிபாய இலக்கம் 123, விஜயராம மாவத்தை கொழும்பு 07 என்ற முகவரிக்குஅனுப்பிவைக்கவேண்டும்.

Related posts: