‘டோரியன்’ புயல் : கனடாவில் 5 லட்சம் பேர் பாதிப்பு!
Tuesday, September 10th, 2019
அமெரிக்காவின் புளோரிடா, வடக்கு கரோலினா மாகாணங்களை தாக்கிய டோரியன் புயல் தற்போது கனடாவை தாக்கியதில் 5 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மணிக்கு 295 கிலோ மீட்டர் வேகத்தில் பஹாமஸ் தீவை தாக்கிய டோரியன், பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. பஹாமஸ் தீவில் 43 பேர் இந்த புயலுக்கு உயிரிழந்த நிலையில் காணாமல் போன 100-க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் நடந்து வருகிறது.
பஹாமசை அடுத்து அமெரிக்காவின் புளோரிடா, வடக்கு கரோலினா மாகாணங்களை ‘டோரியன்’ புயல் தாக்கியது.
தொடர்ந்து கனடாவின் நோவா ஸ்கோபியாவைத் தாக்கிய டோரியன் நேற்றிரவு கனடாவை கரையை கடந்ததாக அறிவிக்கப்பட்டது. புயல் கரையை கடந்த போது 160 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஹாலிபேக்ஸ் நகரில் 5 லட்சம் வீடுகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எனினும் போதிய முன்னேற்பாடுகள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
|
|
|


