இலங்கை தற்கொலை தாக்குதல்களின் எதிரொலி: மலேசியாவில் பாதுகாப்பு உச்சம்!

Saturday, April 27th, 2019

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களையடுத்து மலேசியாவும் தன் நாட்டுப் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேசியாவின் சிறப்பு தூதரகங்கள் மற்றும் பாதுகாப்பு சபைகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 300 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 500இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் இன்னமும் தேடுதல்கள் நடத்தப்பட்டு வருவதுடன், இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் குண்டுகளும், கைப்பற்றப்படுவதுடன், பலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

இன்னமும் இலங்கையில் நிலைமை வழமைக்குத் திரும்பாத நிலையில் மலேசியா தன்னுடைய பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கும் மலேசியாவிற்கும் நெருங்கிய நட்புறவு காணப்படுவதுடன், வர்த்தகப் போக்குவரத்துக்களும், அதிகளவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இலங்கையை களமாகக் கொண்டு ஐஎஸ் அமைப்பு இலங்கை, மாலைதீவு, இந்தியா போன்ற பகுதிகளில் தனது கிளைகளை அமைத்துள்ளதுடன், ஏனைய பகுதிகளிலும் தாக்குதல்களை நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: