பொய் கூறியதை ஒப்புக்கொண்டுள்ளார் ட்ரம்பின் சட்டத்தரணி!

Friday, November 30th, 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் சட்டத்தரணி ஒருவர், காங்கிரஸ் விசாரணைக் குழுவில் பொய்க்கூறியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

2016ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ரஷ்யாவுடன் டொனால்ட் ட்ரம்ப் இரகசிய இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விசாரணையில், ரஷ்யாவிற்கும் டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான சொத்துகள் குறித்த கலந்துரையாடல் தொடர்பில் தாம் காங்கிரஸ் குழுவில் பொய்க்கூறியதாக முன்னாள் சட்டத்தரணி ஒருவர் ஒப்பு கொண்டுள்ளார்.

குறித்த சட்டத்தரணி பொய்க்கூறினார் என்பதை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக் கொண்டுள்ளார். தண்டனை குறையும் என்ற நோக்கத்திலேயே அவர் அவ்வாறு செய்திருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்து விசேட விசாரணைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: