லேரியாவுக்கு எதிரான மிக மலிவான தடுப்பூசியை அங்கீகரித்தது உலக சுகாதார ஸ்தாபனம்!
Tuesday, October 3rd, 2023
லேரியாவுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய மிகவும் மலிவான தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகரித்துள்ளது.
R21/Matrix-M எனும் குறித்த தடுப்பூசி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும்.
இந்த தடுப்பூசி மலேரியாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசியாக கருதப்படுகிறது.
மலேரியாவினால் ஆண்டுதோறும் பெருமளவான பொதுமக்கள் உயிரிழந்து வரும் நிலையில், இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெருமளவானவர்கள் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, குறித்த தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கியுள்ளதோடு, இது மிகவும் மலிவான தடுப்பூசி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் 247 மில்லியன் பேர் மலேரியாவினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 619,000 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய பயங்கரவாதச் சட்டம்: தகவல் அறியும் உரிமை சட்டத்துக்குப் பாதிப்பு!
சகல முச்சக்கரவண்டிகளிலும் கட்டண அளவீட்டு கருவியை பொருத்துவது கட்டாயம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமு...
பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை !
|
|
|
சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்பவர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்படும் - மத்திய வங்கி ஆளுநர் அஜித் ந...
எல்லை நிர்ணய இடைக்கால அறிக்கை தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க கால அவகாசம் - உள்ளூராட்சி மாகாண அமை...
”ரஷ்யா எந்தவொரு நேட்டோ நாட்டையும் தாக்குவதற்கு முடிவுகள் எதுவும் எடுக்கவில்லை – 16 ரக போர் விமானங்கள...


