பிரெக்சிற்றின் பின்னரான சட்டதிட்டங்கள் தொடர்பில் விளக்கம் தேவை: சிரேஷ்ட நீதிபதி!

Wednesday, August 9th, 2017

பிரெக்சிற்றின் பின்னர் எவ்வாறு பிரித்தானிய சட்டதிட்டங்கள் மாற்றப்படும் அல்லது உருவாக்கப்படும் என்பது தொடர்பில் போதிய விளக்கம் தேவை என பிரித்தானியாவின் சிரேஷ்ட நீதிபதி நொய்பேர்கர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்கள் பல, ஐரோப்பிய நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகியமையின் பின்னர், ஐரோப்பிய நீதிமன்றால் விதிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் எவ்வாறு மாற்றமடையும் என்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இதே வேளை ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகிமையின் பின்னர், பிரித்தானியாவின் தீர்மானங்களில் ஐரோப்பிய நீதிமன்றம் அதிகாரம் செலுத்தாது என பிரதமர் தெரேசா மே உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: