40 ஆயிரம் பேர் வாழ 110 பேர் சாகிறதில தப்பில்ல – புடினின் !

Friday, March 16th, 2018

2014 ஆம் ஆண்டு 40 ஆயிரம் பேரைக் காப்பாற்றும் பொருட்டு 110 பேருடன் பயணித்த வானூர்தியைச் சுட்டு வீழ்த்த உத்தரவிட்டேன் என்று தெரிவித்தார் ர~;ய அதிபர் புடின்.

ர~;யாவில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் முக்கிய வேட்பாளராக தற்போதைய அதிபர் புடின் உள்ளார். தேர்தல் பரப்புரைக்காக எடுக்கப்பட்ட ஆவணப்படத்திலேயே மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார் புடின்.

ஆவணப்படத்தில் புடின் தெரிவித்ததாவது:

ரஷ்யாவின் சோச்சி நகரில் கடந்த 2014 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெற்றது. பெப்ரவரி 7 ஆம் திகதி குளிர்கால ஒலிம்பிக் தொடரின் ஆரம்ப நிகழ்வில் நான் கலந்து கொண்டேன். அப்போது பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து எனக்கு அலைபேசி அழைப்பு வந்தது. உக்ரைனில் இருந்து துருக்கி சென்ற பயணிகள் வானூர்தியொன்று கடத்தப்பட்டுள்ளது. வானூர்தியில் ஏகப்பட்ட வெடிபொருள்கள் நிரப்பப்பட்டுள்ளன.

வானூர்தியைக் கொண்டு ஒலிம்பிக் தொடரின் ஆரம்ப விழாவில் தாக்குதல் நடத்தப்படத் திட்டமிட்டுள்ளது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. வானூர்தியில் இருந்த 110 பயணிகளும் அப்பாவிகள்தான். ஆனால் அவர்களைப் பார்த்து ஒலிம்பிக் தொடரின் ஆரம்ப நிகழ்வைக் காணவந்த 40 ஆயிரம் ரசிகர்களின் உயிரைக் காவு கொடுக்க இயலாது. அத்துடன் திட்டமிட்டபடி தாக்குதல் நடத்தப்பட்டால் வானூர்திக்குள் இருந்த பயணிகளும் கொல்லப்படுவார்கள்.

எனவே வானூர்தியைச் சுட்டு வீழ்த்துமாறு உத்தரவிட்டேன். பின்னர் எமக்குக் கிடைத்த தகவல் பொய்யானது என்று தெரிய வந்தது. பின்னர் எனது உத்தரவைத் திரும்பப் பெற்றேன் என்றுள்ளார்.

Related posts: