சிரியாவில் 93 சத வீத கட்டடங்கள் அழிந்துள்ளதாக  அதிர்ச்சித் தகவல்!

Sunday, March 4th, 2018

சிரியாவின் கிழக்கு கோட்டா பிராந்தியத்திற்கு வெளியே அரச படைகளினால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பாரிய தாக்குதலால் அந்த பிரதேசத்தில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள அனைத்து கட்டடங்களும் முற்றாக சேதமடைந்துள்ளன. அங்கிருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்.

யுத்த வானூர்தி குண்டுத்தாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதல்களினால் மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உட்பட பல கட்டடங்கள் முற்றாக அழிந்து போய்உள்ளன.

இந்த அனர்த்தத்தை நிறுத்துவதற்கு ரஷ்யா எந்த முயற்சியினையும் மேற்கொள்ளவில்லை என தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பாதிப்படைந்த பிரதேசங்களில் உள்ள மக்கள் நரகத்தில்வாழ்வது போன்று உள்ளதாக ஐ.நா செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் செறிந்து வாழும் மாவட்டம் ஒன்றில் தற்போது 93 சத வீதமான கட்டடங்கள் அழிந்து போய் உள்ளதாக ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் செய்மதியின் ஊடாகஎடுக்கப்பட்ட புகைப்படங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: