சிரியா போரில் தீர்வு காண முயல்கின்றோம் – துருக்கி பிரதமர்!

Sunday, August 21st, 2016

சிரியாவில் நடைபெற்று வரும் மோதலுக்கு தீர்வு காண்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்க துருக்கி முயன்று வருவதாக துருக்கி பிரதமர் பினாலி இல்டிரிம் தெரிவித்துள்ளார்.

இன வேறுபாடுகளால் சிரியா பிளவுபட்டு விடக் கூடாது என்பது முக்கியமான விஷயம் என்று இஸ்தான்புல்லில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.சிரியாவில் குர்து தீவிரவாத குழுக்கள் வெற்றி பெறுவது, துருக்கியில் சண்டையிட்டு வரும் குர்து இன தீவிரவாதிகளுக்கு ஊக்கமாக அமைந்துவிடும் என துருக்கி அஞ்சுவதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிரியா அதிபர் பஷார் அல் அஸாத் தற்போது நாட்டின் இடைக்கால தலைமையாக பதவி வகித்தாலும், சிரியாவின் எதிர்காலத்தில் அவருக்கு தொடர்பு இருக்காது என துருக்கி பிரதமர் பினாலி இல்டிரிம் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: