வடகொரியாவால் மற்றுமொரு ஏவுகணை சோதனை நடவடிக்கை!

Wednesday, July 5th, 2017

அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனை நடவடிக்கைகள் ஆகியவற்றால் ஏனைய உலக நாடுகளை தடுமாற வைத்துள்ள வடகொரியா, இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கை வடகொரியாவின் நேரப்படி காலை 09.40 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஏவுகணை நிலப்பரப்பை தாக்கும் வல்லமை கொண்டதாக கருதப்படுகின்றது.இந்த ஏவுகணை சுமார் 930 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு சென்றதாகவும் அதற்கு எடுத்த காலம் 37 நிமிடங்கள் எனவும் அமெரிக்க பசுபிக் கட்டளை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த ஏவுகணை ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் வீழ்ந்துள்ளதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனை நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றமை அதன் அணுவாயுதத் திறன் விருத்தி பெறுவதை குறிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts: