பயங்கரவாதத்திற்கு அடிபணியோம்: பிரஸ்ஸல்ஸில் அணிதிரண்ட ஆயிரக்கணக்கானோர்!

Monday, April 18th, 2016

தீவிரவாதத்திற்கு எதிராக பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் குவிந்த ஆயிரக்கணக்கானோர், பெல்ஜியம் பயங்கரவாதிகளுக்கானதல்ல என முழக்கங்கள் எழுப்பினர்.

கடந்த மார்ச் மாதம் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நோக்கில் இந்த ஊர்வலத்தை ஒருங்கிணைத்திருந்தனர்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 7,000 பேர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பிரஸ்ஸல்ஸ் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும், படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்களும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களில் சிலர் ஐ.எஸ்.அமைப்பிற்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை தாங்கியிருந்தனர்.

அதில், பெல்ஜியம் பயங்கரவாதிகளுக்கான நாடல்ல, ஐ.எஸ்.அமைப்பே வெளியே போ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.

ஊர்வலத்தின் முடிவில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் பிரதமர் சார்லஸ். கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி பிரஸ்ஸல்ஸ் நகரில் இருவேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்32 பேர் கொல்லப்பட்டனர் 300கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

Related posts: