28 ஆவது COP உச்சி மாநாடு குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவருமா – எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பமானது ஐ.நா.வின் சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு!

Friday, December 1st, 2023

சர்வதேசத் தலைவர்கள் பலரும் வருகை தந்துள்ள நிலையில் துபாயில் தொடங்கியுள்ள ஐ.நா.வின் COP28 மாநாட்டின் ஒருபகுதியாக நடைபெறும் சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

COP28 உச்சி மாநாடானது நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை துபாயில் நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகம் இந்த மாநாட்டை ஏற்று நடத்துகிறது.

இந்நிலையில் துபாய் பயணத்துக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில்,

“COP28 உச்சி மாநாடானது பாரீஸ் ஒப்பந்தத்தின்படி உலக நாடுகள் காலநிலை மாற்றம் தடுப்பு நடவடிக்கைகளில் எந்த மாதிரியாக முன்னேறியுள்ளன, எதிர்கால திட்டங்கள் என்ன?, அவற்றை செயல்படுத்தும் வழிமுறையகள் யாவை ஆகியன குறித்து ஆலோசிக்க வாய்ப்பளிக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

கடந்த 27ஆவது மாநாடு கடந்த ஐ.நா.வின் COP27 ஆவது மாநாடானது, கனடாவின் சார்ம் எல் செயிக்கில் 2022ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இதன்போதும், நிதியுதவி தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் நிதியுதவிகள் தொடரபான பல சிக்கல்கள் இடம்பெற்ற போதிலும் இந்த மாநாட்டில் அதை நிவர்த்தி செய்ய பல திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாரிஸ் பருவநிலை ஒப்பம் விவரம் பற்ற வழமையாக பேசப்படும் ஒரு விடயமாகும்.

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் என்பது கடந்த 2015- ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டு, 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 175 நாடுகள் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 28வது COP உச்சி மாநாடு குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: