அமெரிக்க கப்பல் மீது ஏவுகணை வீச்சு!

Tuesday, October 11th, 2016

யெமன் கடற்பகுதியில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க போர் கப்பல் ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரு ஏவுகணை தாக்குதல்கள் தவறி நீரில் விழுந்ததாக பெண்டகன் தெரிவித்துள்ளது.

யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்தே இந்த ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய அரபு இராச்சிய கப்பல் ஒன்று ஹூத்திக்களின் தாக்குதலுக்கு இலக்காகி ஒரு வாரத்திற்குள்ளேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யூ.எஸ்.எஸ் மேசன் அமெரிக்க போர் கப்பல் செங்கடலின் தென் முனையில் கடற்கரைக்கு 12 கடல் மைல்களுக்கு அப்பால் சர்வதேச கடற்பகுதியிலேயே இருந்ததாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த ஏவுகணை தாக்குதலில் குறித்த ஏவுணைகள் போர் கப்பலை அடையும் முன்னர் கடலில் விழுந்ததாக பெண்டகன் குறிப்பிட்டுள்ளது.

யெமனில் இடம்பெற்று வரும் உள்நாட்டு போரில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவூதி அரேபிய கூட்டுப்படைக்கு அமெரிக்கா ஆதரவாக செயற்பட்டு வருகிறது.

 coltkn-10-11-fr-04155621489_4872355_10102016_mss_cmy

 

Related posts: