பொருளாதார தடையினை விதிப்பதால் பயனில்லை – சீனா!

Monday, August 7th, 2017

வடகொரியாவிற்கு எதிராக பொருளாதார தடையினை விதிப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வினை எட்ட முடியாது என சீனா தெரிவித்துள்ளது

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையினால் ஏகமனதாக வடகொரியாவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் மேலதிக பொருளாதார தடை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே சீனா இதனை தெரிவித்துள்ளது

இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண சம்பந்தப்பட்டவர்கள் பேச்சு வார்த்தையினை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து சீனாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ள மேலதிக பொருளாதார தடை காரணமாக வட கொரியா வருடாந்தரம் 300 கோடி அமெரிக்க டொலர்கள் வர்த்தகத்தினை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: