ஜனவரி முதல் வாரத்தில் கடும் சூறாவளி – எச்சரிக்கிறது வானிலை அவதான நிலையம்!

Monday, December 31st, 2018

கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்று வங்கக் கடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அடுத்த வாரம் 2 ஆம் திகதி வாக்கில் தென் சீனக்கடலில் வியட் நாம், கம்போடியாவுக்கு தெற்கே புயல் உருவாகிறது.

இது 4 ஆம் திகதி மலாய் தீபகற்பம் வழியாக கரையை கடந்து வங்கக் கடலுக்குள் நுழைந்து 5 ஆம் திகதி இரவு அந்தமான்-நிக்கோபர் தீவுகளை கடுமையாக தாக்கும் என்று தனியார் வானிலை இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இந்த புயல் வடக்கு மத்திய வங்கக்கடல் வழியாக மியான்மர், பங்களாதேஷ் நோக்கி செல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் தென் இந்திய பகுதிக்கு இதனால் பாதிப்பு இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

Related posts: