வீழ்ச்சி அடையும் இலங்கையின் ஏற்றுமதிகள்

Saturday, May 6th, 2017

2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதிகள் கடந்த ஆண்டை விட 3.8 வீதத்தால் அதாவது 864.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந் துள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர் . தொழிற்துறை ஏற்றுமதிகள் குறைவடையும் அதே வேளை எரிபொருள் விலை ஏற்றம் வறட்சி போன்றவ்றால் இறக்குமதிகள் அதிகரித்துள்ளதாகவும்  உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஆடை ஏற்றுமதிகள் 8.2 சதவிகிதம் குறைந்து, 426.3 மில்லியன் டாலர்களாகவும் ரப்பர் பொருட்கள் 18.7 சதவிகிதம் சதவிகிதம் குறைந்து 58 மில்லியன் டாலர்களாகவும் வீழ்ச்சி அடைத்துள்ளன.

தேயிலை ஏற்றுமதிகள் 2.1 சதவிகிதம் உயர்ந்து 101.6 மில்லியன் டாலர்களாகவும் சிறு தானியங்களின் ஏற்றுமதி 33.7 சதவிகிதம் உயர்ந்து 30.4 மில்லியன் டாலர்களாகவும், கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 19.7 சதவிகிதம் உயர்ந்து 18.2 மில்லியன் டாலர்களாகவும் உயர்ந்துள்ளது எனவும் புள்ளி விபரங்கள் தேரிவிகின்றன.

உணவுப் பொருட்களின் இறக்குமதிகள் 4.4 சதவீதம் உயர்ந்து 358.8 மில்லியன் டாலர்களாகவும், உணவு சாராத நுகர்வோர் பொருட்களின் விலை 4.3 சதவீதம் குறைந்து 215.2 மில்லியன் டாலர்களாக குறைந்துள்ளதாகவும் . வாகன இறக்குமதி 24.1 சதவிகிதம் குறைந்து  66 மில்லியன் டாலர்களாக உள்ளதாகவும் தேரிவிக்கப்படுகின்றது..

Related posts: