போரில் அங்கவீனமான பொலிஸாருக்கு சலுகை!

Sunday, February 10th, 2019

போரில் அங்கவீனமடைந்த பொலிஸாருக்குப் பதவியுயர்வுகள் மற்றும் சம்பள அதிகரிப்புகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதவி உயர்வு சம்பள அதிகரிப்பு வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அங்கீகாரத்துக்கமைய போரில் அவயவங்களை இழந்து சேவையிலிருந்து ஓய்வுபெற்ற 785 பொலிஸ் அலுவலர்கள், அவயவங்களை இழந்து இலகு சேவையில் ஈடுபட்டுள்ள 677 பொலிஸார் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இலகு சேவையில் ஈடுபட்டுள்ளவர்களில் 340 பேருக்கும் இரண்டு சம்பள உயர்வுகளை அவர்கள் அங்கவீனம் அடைந்த தினத்தின் அடிப்படையில் பெற்றுக் கொடுப்பதற்கு 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாத சுற்றறிக்கையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவயவங்களை இழந்து மருத்துவ ஆலோசகையின் பேரில் ஓய்வுபெற்ற 785 பொலிஸ் அதிகாரிகளுக்கான பதவியுயர்வுகள் மற்றும் அவற்றுக்கான கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். அதேவேளை பத்து வருடங்களை பூர்த்தி செய்யாது ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்த 150 பொலிஸ் அலுவர்களுக்கு ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

Related posts: