பாடசாலைகளில் இடம்பெறும் காலைப் பிரார்த்தனைகளைப் பயனுள்ளதாக மாற்ற நடவடிக்கை!

Sunday, December 24th, 2017

வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் இடம்பெறும் காலைப் பிரார்த்தனைகளைப் பயனுள்ளதாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

மாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது;

பாடசாலை மாணவர்களுக்கு ஆன்மீகம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த அறிவுரைகளை வழங்குவது அவசியமானதாகும். இதன் மூலம் அவர்கள் ஒழுக்கம் நிறைந்தவர்களாக மாற்றம் பெறுவர்.

பாடசாலைகளில் காலைப் பிரார்த்தனை நடைபெறுகின்றது. வாரத்தில் ஒருமுறை பொருத்தமான நாளில் காலைப் பிரார்த்தனையின் போது ஆன்மீகம் மற்றும் ஒழுக்கங்களைப் போதிக்கக் கூடிய கருத்துரைகள் ஆசிரியர்கள் அல்லது துறை சார்ந்த நபர்களால் வழங்கப்படவேண்டும்.

இது தவிர தினமும் நடைபெறும் காலைப்பிரார்த்தனைகளின் போது மாணவர்களால் பத்திரிகைத் தலைப்புச் செய்திகளை வாசிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதனால் மாணவர்களின் வாசிப்புத் திறன் மேலோங்குவதுடன் நாட்டில் நடைபெறும் பல்வேறு விடயங்களையும் தெரிந்து கொள்ள ஒருவாய்ப்பு ஏற்படும்.

செய்திகளை வாசிக்கும் செயல்பாட்டுக்கு அனைத்து மாணவர்களுக்கும் சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தல் வேண்டும். என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: