இனவாதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்களை வெளியிடும் இனவாதிகளுக்கு புனர்வாழ்வு – நீதியமைச்சர் தெரிவிப்பு!

Monday, August 31st, 2020

எல்லா சமூகத்திலும் இனவாதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்களை வெளியிடும் வகையில் குறிப்பிட்ட சில தரப்பினர் இருக்கின்றனர். அவ்வாறானவர்களை அடையாளம் கண்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தவே தாம் முயற்சிப்பதாக நீதியமைச்சர் அலி சப்ரி மகாநாயக்கர்களிடம் தெரிவித்துள்ளார்.

மல்வத்து அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட பின்னர். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் –

அரசியல் யாப்புக்கு இணைவாக, பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கான பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டு மக்கள் அனைவருக்காகவும் கடமையாற்றுவதற்காகவே தான் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர் சிறு வயதிலிருந்தே சிங்கள அரிச்சுவடியை கற்றுள்ள தான், இஸ்லாம் மதத்தவராக இருந்தபோதும் இலங்கையின் கலாசாரத்திற்கு அமைவாகவே வளர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் நல்லதொரு இலங்கையராக ஏனைய சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு அனைவரும் முன்நிற்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


5 நாடுகளுக்கு செல்ல இலங்கை பயணிகளுக்கு அனுமதியில்லை - விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தி...
இலங்கையில் எவரும் இனவாதத்தைக் கையிலெடுத்து ஆட்சியைத் தக்கவைக்கவோ அல்லது ஆட்சியைப் பிடிக்கவோ முடியாது...
சீரற்ற வானிலை - கிளிநொச்சி மாவட்டத்தில் 5204 பேர் பாதிப்பு - , 21 வீடுகள் பகுதியளவில் சேதம் - மாவட்ட...