உயர்தரப் பரீட்சையில் நெருக்குதலா? – ஆராய குழு அமைத்தது பரீட்சைத் திணைக்களம்!

Thursday, February 14th, 2019

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் மாணவர்களுக்கு மேலதிக நெருக்குதல்களைக் கொடுக்கின்றனவா என்பதை ஆராய்வதற்கு பரீட்சைத் திணைக்களம் குழுவொன்றை நியமித்துள்ளது. அதற்கான பணிப்புரையை அகிலவிராஜ் காரியவசம் பிறப்பித்துள்ளார்.

இலங்கையின் கல்விப் பரீட்சைகள் மாணவர்களுக்கு மேலதிக நெருக்குதல்களைக் கொடுக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்துவதற்காக லண்டன் க.பொ.த சாதாரணதர, உயர்தரப் பரீட்சைகளுடன் ஒப்பீடு செய்யும் வகையிலேயே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

லண்டன் பரீட்சைகளை விடவும் இலங்கையின் பரீட்சைகள் உணர்வானவை என்று நம்பப்படுவதால் பாடவிதானங்களில் உள்ள பிரதான வேறுபாடுகள் போன்ற அம்சத்தை ஆராய உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

பாடவிதானங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டுமா? மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் மணித்தியாலங்கள் மாற்றப்பட வேண்டுமா? எத்தகைய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்? போன்ற விடயங்களை ஆராய்ந்த பின்னர் விதந்துரைகள் பரிசீலனைக்காக கல்வி அமைச்சுக்கு வழங்கப்படவுள்ளன.

அவசியம் ஏற்படும் பட்சத்தில் முதலில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளில் முதலில் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: