அபிவிருத்தி அனுமதிப் பத்திரங்களுக்காக துரிதமாக அனுமதி வழங்குவதற்கு நாடளாவிய ரீதியில் புதிய திட்டம் அறிமுகம் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, September 15th, 2022

தனியார்துறை மூலம் அனுமதி பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி அனுமதிப் பத்திரங்களுக்காக துரிதமாக அனுமதி வழங்குவதற்காக ” One Stop Shop” முறையொன்று நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இந்த புதிய முறை எதிர்வரும் நவம்பர் மாதத்திலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனூடாக அபிவிருத்தி அனுமதிகளுக்குரிய சகல அனுமதிகளையும் ஒரே இடத்தில் துரிதமாகப் பெற்றுக் கொள்வதற்கு முடியுமாக இருக்கும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

புதிய சேவை மையம் ஒன்றை அறிமுகப்படுத்தும் அடிப்படையான காரணம் அபிவிருத்தி அனுமதிப் பத்திரங்களுக்கான அனுமதி கொடுப்பதற்கு ஏற்படுகின்ற காலத்தைக் குறைப்பதும் இலகுபடுத்துவதன் மூலம் அதிகமான முதலீட்டாளர்களைக் கவர்வதும் ஆகும்.

குறிப்பாக ஒன்லைன் முறை மூலம் அபிவிருத்தி அனுமதிப் பத்திரங்களுக்கான அனுமதியைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் உயரதிகாரிகளுக்கு கண்காணிபதற்கான வழிமுறையொன்றை ஏற்படுத்தி ஒழுங்குமுறை வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதன் மூலம் ஊழல் குற்றங்களைக் குறைப்பதற்கு முடியுமாக இருக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அபிவிருத்தி அனுமதியை பெற்றவருக்காக குறித்த அடுத்த நிறுவனங்களின் அனுமதியைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கின்ற போது அவற்றை இந்த சேவை அலகின் மூலமாக செய்து முடிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

33 நிறுவனங்களை உள்ளடக்கிய வகையில் இந்த சேவை மையம் உருவாக்கப்பட்டுள்ளதோடு அந்த சகல நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஸ்கோப் குழு (Scope Committee) ஒன்று நிறுவப்பட்டுள்ளது. குறித்த அபிவிருத்தி அனுமதிப் பத்திரத்திற்கான இறுதி அனுமதியைப் பெற்றுக் கொடுப்பது அந்த குழுவே ஆகும்.

அதே போன்று நகர அபிவிருத்தி அதிகாரசபை மூலம் இதுவரை செயற்படுத்தப்பட்டுள்ள சில வேலைத்திட்டங்களுக்காக இதுவரை செய்யப்பட்டுள்ள செலவுகள் வீணாகாத முறையில் கட்டம் கட்டமாக அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முகம் கொடுத்துள்ள பொருளாதார நிலையைப் புரிந்து கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இதன்படி அடுத்த வருடத்தில் முக்கியமாக அரச பணம் குறைந்தளவு பயன்படுத்தப்பட்டு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அதிகார சபை மூலம் இந்த வருடத்தில் திறைசேரியால் வழங்கப்பட்ட 3264 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு 208 வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதே போன்று நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணம் 10158 மில்லியன் ரூபா பெறுமதியான 5 வேலைத் திட்டங்களும் இந்த வருடத்திற்குள்ளே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றுள் திறைசேரியின் நிதி மூலம் செய்யப்பட்ட 28 வேலைத்திட்டங்கள் அடுத்த வருடம் தொடங்குவதற்கு இருக்கின்ற அதே நேரம் அதற்காக 7820 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று இந்த வருடத்தினுள் நடைமுறைபடுத்தப்பட்ட சில வேலைத் திட்டங்களின் ஒப்பந்தக்காரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான அமைச்சரவையின் அனுமதி ஏற்கனவே பெறப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி ஒப்பந்தக்காரர்கள் எதிர் நோக்கும் விலை வித்தியாசங்கள் அவர்களது ஒப்பந்தக் காலத்தை நீடித்தல், பிணைத் தொகையை நீடித்தல் மற்றும் ஒப்பந்தங்களுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்யும் போது வழங்கப்படக் கூடிய சலுகைகள் போன்ற தீர்வுகள் பலவும் வழங்கப்பட்டுள்ளதாக இங்கு தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்கள் அல்லது அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான, முறையாகப் பயன்படுத்தப்படாத அபிவிருத்திக்காகப் பயன்படுத்தக் கூடிய நகரப் பகுதி காணிகள் அடையாளம் காணப்படும் வேலைகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தக் காணிகள் நகர அபிவிருத்தி அதிகார சபையால் மீட்கப்பட்டு அல்லது குறித்த நிறுவனத்திற்கு இருக்கும் பொழுதே தனியாக துறையோடு இணைந்து அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: