அமரர் சிறி ஐயாவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இதய அஞ்சலிகள்!
Sunday, December 9th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவிரமான ஆதரவாளரும் பிரபல வர்த்தகருமான மரியாதைக்குரிய கோவிந்தராஜா ஶ்ரீஸ்கந்தராஜா அவர்கள் இன்று (09.12.2018)கொழும்பில் காலமானார்.
சிறி ஐயா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த துயரத்துடன் அவருக்கு எமது இதய அஞ்சலிகளை செலுத்துகின்றோம். அவரது இழப்பால் துயரம் சுமந்து தவிக்கும் அவரது மனைவி , பிள்ளைகள், உறவினர்கள் ,நன்பர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாமும் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.
நல்லூர் கோவில் வீதியில் வசித்துவந்த சிறி ஐயா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட அன்னாரின் புகழுடல் கொழும்பிலிருந்து நாளை காலை அவரின் யாழ்ப்பாண இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இறுதிக்கிரியைகள் தொடர்பான அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.



Related posts:
உரிமைகளை வென்றெடுக்க உறுதியுடன் உழைப்போம் - கரவெட்டியில் ஈ.பி.டி.பி!
சமுர்த்தியூடாக கிடைக்கின்ற நலன்ககளைக்கொண்டு பொருளாதார ரீதியில் மேம்படும் வழிவகைகளை உருவாக்குங்கள் – ...
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இன்று பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதும் ...
|
|
|


