13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இன்று பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதும் தரப்பினர் இதுவரை தங்களது வகிபாகத்தை சரியாகக் செய்திருக்கின்றார்களா – சின்னத்துரை தவராசா கேள்வி!

Sunday, July 16th, 2023

தமிழர்கள் குறிப்பாக தமிழ் தலைமைப்பீடம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தங்களது வகிபாகத்தை சரியாகக் செய்திருக்கின்றார்களா? என்று தங்களை தாமே சுயவிமர்சனம் செய்து பார்க்கவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் வடமாகாண சபை  எதிர்க்கட்சித் தலைவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிரேஸ்ட ஆலோசகருமான சின்னத்துரை தவராசா அரசியல் தீர்விற்கான எமது பாதையின் முதல் கட்டமாக, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே சரியான முறைமையென தொடர்ச்சியாகவும் ஆணித்தரமாகவும் ஜனாதிபதி பிரமேதாசா காலத்திலிருந்து இன்றுவரை  கூறி வந்த  கூறிக் கொண்டிருக்கும் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதியாக இந்த மேடையில் முன் பேசுவதையிட்டு பெருமையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற 13 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடலின்  போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

உண்மையில் எங்கள் கட்சி 13 வது திருத்தச் சட்டத்தை மட்டுமல்ல இந்திய – இலங்கை ஒப்பந்தத்தையே முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென நிலைப்பாட்டிலேயே இருந்துவருகின்றோம்.

ஏனெனில் 16 ஆவது திருத்தச் சட்டமும் இன்றுவரை முழுமையாக அமுல்படுத்தப்படாத நிலையிலேயே இருக்கின்றது. அத்துடன் ஒரு சட்டத்தின் சாரம்சம் அந்தசட்டத்தில் பொதிந்திருக்கும் கருத்திட்டத்திலேயே தங்கியிருக்கிறது என்பது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்டசட்டவியாக்கியானம் ஆகும்.

அதனால் 13 ஆவது திருத்தச் சட்டத்தையோ அல்லது 16வது திருத்தச் சட்டத்தையோ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்மென நாம் கோரும் போது அது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் பொதிந்திருக்கும் கருத்து சாரம்சத்தின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வதிவிடமாக அவ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த கருத்து சாராம்சத்தையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

மேலும் இத்தருணத்தில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் நாம் அமுல் படுத்தசந்தர்ப்பம் கிடைத்தும் தவறிய ஒரு சரத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

“முரண்பாடுகள் ஓய்வுக்கு வந்து ஆயுதக் குழுக்கள் தங்களது ஆயுதங்களை கையளித்தபின், 25 மே 1987 இலிருந்து பாதுகாப்பு படையினர் அவர்களது முகாம்களுக்குள் முடங்கியிருப்பர் என்பதாகும்”.

நான் நேரில் பங்குபற்றிய அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பான கூட்டங்களில்  “நாங்கள் 13வது திருத்தத்தினை தும்புத்தடியால் கூட தொடமாட்டோம்”என்று எமது அரசியல் தலைமைகளினால் கூறப்பட்டது.

ஆனால் இன்று சக லதமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இங்கு குழுமியிருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். காலம் கடந்தாவது ஞானம் பிறந்தது வரவேற்கத்தக்க விடயம் ஆகும்.

இதேநேரம் 13வது திருத்தச் சட்டத்தினை மூன்று கட்டமாக முழுமையாக நடைமுறைப்படுத்தல் தொடர்பாக எனது கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது.

அதில் முதலாவதாக மத்தியினால் கடந்த 30 வருடங்களிற்கு மேலாக பிழையாக கையகப்படுத்தி வைத்துள்ள விடயப்பரப்புகளை மீளப்பெற்றுக் கொள்ளலும் அரசாங்கத்தினால் வழங்காமல் வைத்துக் கொண்டிருக்கும் விடயப் பரப்புகளை வழங்கவைத்தலும்.

இரண்டாவதாக 13வது திருத்தச் சட்டத்தின் சரத்துகளுடன் முரண்பாடாக உள்ள சில சட்டங்களின் சரத்துக்களை மாற்றியமைத்தல். அவற்றில் பெரும்பான்மையானவை குறிப்பாக 1987ம் ஆண்டு மாகாணசபைகள் சட்;டம் மற்றும் 1992ம் ஆண்டின் பிரதேச செயலாளர்கள் சட்டம் நீங்கலாக 13வது திருத்தச் சட்டத்திற்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட சட்டங்களாகும்.

மூன்றாவதாக 13 ஆவது திருத்தச் சட்டத்தினை இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கருத்து சாரம்சத்தின் அடிப்படையில் அர்த்தபூர்வமாக்குவதற்கு ஏற்றவகையில் அரசியலமைப்பில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள்.

முதலில், மத்தியினால் பிழையாக கையகப்படுத்திக் கொண்ட விடயப்பரப்புகள் தொடர்பாக எத்தனையோ விடயங்களை என்னால் சுட்டிக் காட்டமுடியும். ஆனால் நேரத்தினைகருத்தில் கொண்டு அவற்றில் சிலவற்றை மட்டுமே குறிப்பிடுகின்றேன்.

விவசாயம் மற்றும் கமலநலசேவைகள் மாகாண சபை நிரலில் உள்ளவிடயமாகும் (9வது விடயப்பரப்பு). கமநலசேவைகள் மாகாண சபைக்குரிய விடயப்பரப்பு என உச்ச நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டும,; மத்தி கமநல அபிவிருத்தி திணைக்களம் என்ற பெயரில் அவ்விடயப்பரப்புகளை கையாண்டுவருகின்றது.

வடக்குமாகாண சபை கமநல சேவைகளுக்கான நியதிச் சட்டத்தினை ஏற்படுத்திமத்தியின் செயற்பாடுகளை சவாலுக்குள்ளாக்கி இருக்கமுடியும்.

அதேபோன்று 987ன் மாகாண சபைகளின் சட்டத்திற்கு அமையமாகாண சபை ஊழியர்களின் நியமனம், இடமாற்றம், விலக்கல் மற்றும் ஒழுக்ககட்டுப்பாடு என்பன ஆளுநருக்குரிய விடயமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநர் அதனை பொதுசேவை ஆணைக்குழு மூலம் நடைமுறைப்படுத்தும்.

அதாவது மாகாணசபைக்குள் வெளிமாகாணங்களில் இருந்து அல்லது மத்தியில் இருந்துஒருவரை இடமாற்றம் செய்ய வேண்டுமாயின் அவரை மாகாண சபைக்குமாற்றம் செய்து அதன் பின் மாகாண பொது சேவை ஆணைக் குழுவே அவரை எங்கு நியமனம் செய்வது என்பதனை முடிவாக்க pஅதற்கான நியமனக் கடிதத்தினைவழங்கும்.

ஆனால் இவற்றிற்கு முரண்பாடாக இன்று டாக்டர்கள், மாகாணசுகாதாரபணிப்பாளர், பிரதிமாகாணசுகாதாரபணிப்பாளர், பிராந்தியசு காதாரசேவைகள் பணிப்பாளர், பிரதிபிராந்திய சேவைகள் பணிப்பாளர், மாவட்ட வைத்தியசாலைகளின் பணிப்பாளர்மற்றும் பிரதிப் பணிப்பாளர்கள் மற்றும் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் ஆகியோi ரமத்திய அமைச்சின் செயலாளரே நேரடியாக நியமிக்கின்றார்.

இதேவேளை  தொல்பொருட் சின்னங்களை மாகாண சபைக்குள் கொண்டு வர எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என  முன்னாள் வடமாகாண சபை  எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குற்றச்சாட்டியுள்ளார்.

அத்துடன் 13 ஆம் திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதனை தும்புத்தடியால் கூடத் தொடமாட்டார்கள் எனக் கூறியவர்கள்  இச் சட்டத்தை  அமுல்ப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் என்றும் சுட்டிக்காட்டிய அவர் பல்வேறு காலகட்டத்தில் சுவீகரிக்கப்பட்ட மற்றும் கையளிக்கப்படாத விடயங்களை மீளப்பெற வேண்டும் , ஒரு அரசியலமைப்பு சட்டம் அறிமுகப்படுத்தும் போது அதற்கு முரணாக உள்ள அரசியலமைப்பு சட்டங்கள் சீர்செய்யப்பட வேண்டும் மற்றும் 13 ம் திருத்தச் சட்டத்தில் சில குறைபாடுகள் காணப்படுகின்றது எனவும் கோடிட்டுக்காட்டியுள்ளார்.

எனவே இந்த மூன்று கட்டங்களூடாக 13ஆம் திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். ஆனால் இது தான் தீர்வு என எமது கட்சி கூறவில்லை தீர்வுக்கான படிமுறையே  ஆகும்.

இதேவேளை மத்திய அரசு கையகப்படுத்திய சட்டத்தை மீளப் பெற தமிழ் தரப்பினர் என்ன செய்திருக்கின்றோம் என்ற கேள்வி. உள்ளது.

இது இவ்வாறிருக்க வடமாகாண சபைக் காலத்தில் 15 நியதிச் சட்டத்தை மட்டுமே நிறைவேற்றியதுடன் எந்த சட்ட வலுவற்ற  445 பிரேரணைகளை நிறைவேற்றியுள்ளோம்.

கமநல சேவை மாகாண சபைக்குரியதாக காணப்பட்டாலும் மத்திய அரசு அபிவிருத்தி சபைகள் மூலம் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது அதனை மேல் நீதிமன்றுக்கு சென்று , நியதிச் சட்டம் மூலமாக மீளப் பறெ நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

தொல்பொருள் சார்ந்த விடயங்கள் பாராளுமன்றத்தினூடாக மத்திக்குரியது. மத்திக்கல்லாத தொல்பொருட் சின்னங்களை நியதிச் சட்டங்கள் மூலம் மாகாண சபைக்குள் கொண்டு வர எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

சமூக சேவைகள் திணைக்களம் , விளையாட்டு திணைக்களம் கைத்தொழில் திணைக்களம் மற்றும்  காணி அபிவிருத்தி  திணைக்களங்களுக்கு மாகாண சபையூடாக சம்பளம் கொடுக்கப்படுகின்றது. ஆனால் அவர்கள் நடைமுறையில் மத்தியின் கீழ் செயற்படும் நிலையிலே இயங்குகின்றார்கள்.

இதுவரை எம்மை பலப்படுத்தாமல் அடுத்த கட்டத்திற்குள்  நகரும் போது அதை செயல்படுத்துவதற்குரிய அரசியல் பீடம் , அனுபவம் மற்றும் ஆளுமை இருக்கின்றதா என்ற கேள்வி  எழுகின்றது.

இவை அணைத்தும் இந்தியாவின் அணுசரணையில் மேற்கொள்ள வேண்டியதாகும்.  மத்திய அரசு எமது அதிகாரங்களை எடுத்து வைத்திருப்பதில் தொண்ணுறு வீதமானது எம்முடையதே மாறாக அரசாங்கத்தினதும் இந்தியாவினதுடையதும்  பிழையல்ல.

13 ம் திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என  அன்றிலிருந்து இன்று வரை எமது கட்சி அக்கறையுடன் உள்ளது எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: