தொடர்ந்தும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Sunday, February 13th, 2022

நாட்டின் சில பகுதியில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளிலும் மற்றும் மேல் மாகாணத்திலும் இவ்வாறு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதுநாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்தும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய வானிலை குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறிப்பாக ”வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தற்போது பெய்து வருகின்ற தொடர் அடை மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தாழ் நிலப் பகுதிகள் மற்றும் வயல் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவீக்கப்படுகின்றது.

குறிப்பாக திருகோணமலை , கிண்ணியா, தம்பலகாமம் பாலம்போட்டாறு மற்றும் பத்தினிபுரம் உட்பட பல கிராமங்கள் இதன் காரணமாக நீரினால் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

நாளாந்த சில தொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதுடன் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் புகுந்ததால் பல்வேறு அசௌகரியங்களை  எதிர்நோக்கியுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: