பொலிஸ் அதிகாரியின் பிணை மனு நிராகரிப்பு!

Wednesday, August 9th, 2017

மாணவி வித்தியா கொலை தொடர்பான பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் தப்பிச்செல்வதற்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நீதவான் எம்.எம்.ரியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது ஆஜராகிய லலித் ஜெயசிங்கவின் சட்டத்தரணிகள், பிணை கோரிக்கையை முன்வைத்தனர்.

இதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நாகரட்ணம் நிசாந்த் கடும் ஆட்சேபனை தெரிவித்ததோடு, பிணை வழங்கப்படும் பட்சத்தில் வித்தியா கொலை தொடர்பான சாட்சியங்களில் தலையீடு செய்வதற்கான வாய்ப்புள்ளதெனவும் சுட்டிக்காட்டினார்.இதனைக் கருத்திற்கொண்ட நீதிமன்றம், பிணை கோரிக்கையை நிராகரித்ததோடு சந்தேகநபரை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது

Related posts: