கால்நடைளால் ஏற்படும் பாதிப்பினை தவிர்க்க விவசாயிகள் கால்நடை உரிமையாளர்கள் இடையே முன்னேற்பாடுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் அமீன் தெரிவிப்பு!

Thursday, August 17th, 2023

பயிற்செய்கையில் கால்நடைகளின் பாதிப்பினை தவிர்ப்பதற்கான முன்னேற்பாட்டினை  விவசாயிகள்  கால்நடை உரிமையாளர்களுடன் கூட்டாக மேற்கொண்டிருக்க  வேண்டுமென ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் ரட்ணம் அமீன் தெரிவித்தார்.

கோணாவில் கிராம சேவகர் பிரிவுக்கான கிராமிய புத்தெழுச்சிக் குழுவுக்கான இன்றைய  கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கோணாவில் கிராம சேவகர் அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் அங்கு செயற்பாட்டில் இருக்கும் பொது அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகள்  இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் உதவித் திட்டத்தின் கீழ் கோணாவில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விதை தானியங்கள் பயிற் செய்கையின் போது கால் படைகளின் பாதிப்புக்குள்ளான நிலமைகளை கவனத்தில் எடுத்து உரையாற்றிய இணைப்பாளர் மேலும் தனது உரையில்;

இரண்டு மாதங்கள் முன்னதாக அரை ஏக்கர் வீதம் மொத்தம்  40 பயனாளிகளுக்காக  20 ஏக்கரில் செய்கையை முன்னெடுக்க வென கிலோ 1370 ரூபா பெறுமதியான  தானியங்கள் கௌரவ அமைச்சர் அவர்கள் கோணாவில் கமக்காரர் அமைப்பு ஊடாக  அப் பகுதி விவசாயிகளுக்கு வழங்கி இருந்தார்.

குறைந்த பட்சம் விவசாயிகளுக்கும் கால்நடை உரிமையாளர்களுக்கும் இடையே எவ்வித முன்னேற்பாடுகளும் பேசப்படாத நிலையில் இத் தானியங்கள் செய்கை  பண்ணப்பட்டிருக் கின்றன.

பாசன முறை மூலம் முன்னெடுக்கப்பட்ட இச் செய்கையில் கமநல சேவை நிலையம்,  நீர்ப்பாசன திணைக்களம்,  மாவட்ட செயலகம், கால்நடை திணைக்களம் என்பவற்றுடன் விவசாய அமைப்புக்கள் உரிய முறையில் தொடர்பை பேணி இச்செய்கையை முன்னெடுத்திருக்க வேண்டும்.

இந்த ஒழுங்கு முறைகளை பேணாத நிலையில் மேற்கொண்ட இச் செய்கையில் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர் கொண்டிருப்பது தேவையற்ற துன்பமான ஒரு நிலையாகும்.

இவ்வாறான நிலமைகள் இனிமேலும் இடம்பெறாதவாறு பார்த்துக் கொள்வதில் நாம் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

இச் சந்திப்பில் உலக உணவுத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய விநியோகங்களுக்காக தெரிவான பயனாளிகள் மீதான முறைப்பாடுகள், குடும்ப பதிவுகள் அற்ற குடும்பங்களுக்கான குடியுரிமை ஆவணங்களை பெறுவதில் உள்ள நெருக்கடிகள், இப்பகுதி வீட்டு தோட்ட செய்கையாளர்களின் நிலைமைகளும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: