மீன்களின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம் – தேவைக்கு ஏற்ப கோழி இறைச்சி உற்பத்தி அதிகரிக்கவில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, July 6th, 2023

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒரு கிலோ கிராம் மீனின் விலையானது 3000 ரூபாவாக உயர்ந்துள்ளது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் மீன்பிடியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே தற்போது கோழி இறைச்சியின் விலை உயர்வதற்கும் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மேலும் மீன்பிடி குறைவடைந்ததன் விளைவாக அதிக தேவை காரணமாக கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக தேவைக்கு ஏற்ப கோழி இறைச்சி உற்பத்தி அதிகரிக்கவில்லை. கோழியின் விலையை அதிக அளவில் உயர்த்துவது நியாயமற்றது.

விரைவில் கோழி இறைச்சி விலையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். முட்டை உற்பத்தி இயல்பு நிலைக்குத் திரும்புவதால், மூன்று மாதங்களுக்குள் முட்டை தட்டுப்பாடும் தீர்க்கப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: