கண்டுபிடிக்க உதவுமாறு மக்களிடம் கோரிக்கை.!

Tuesday, July 5th, 2016

சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவைப் படுகொலை செய்தனர் என்று சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர்கள் இருவரின் மாதிரி வரைபடங்களை பொலிஸ் தலைமையலுவலகம் வெளியிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சாட்சியங்கள் மற்றும் சாட்சியாளர்களின் தகவல்களுக்கு அமைவாக பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவின் ஓவிய நிபுணர்களால் இந்த உருவங்கள் வரையப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காகவே இவ்வாறு அவர்களது உருவங்கள் வரையப்பட்டுள்ளதாகவும் இந்த உருவ அமைப்பை ஒத்தவர்களை காணுமிடத்து அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்குமாறும் பொது மக்களைக் கேட்டுக்கொள்வதாகவும் பொலிஸ் தலைமையலுவலகம் அறிவித்துள்ளது.

சாட்சியாளர்களின் தகவல்கள் பிரகாரம் வரையப்பட்டுள்ள முதலாவது சந்தேக நபர் 35 வயது மதிக்கத்தக்கவர் எனவும், 5 அடி 8 அங்குலம் வரையிலான உயரம் கொண்டவர் எனவும் கண்கள் கபில நிறத்தை உடையன என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன் அவர் வெள்ளைநிற கட்டுடலைக் கொண்டவர் எனவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சாட்சியங்களின் பிரகாரம் வரையப்பட்டுள்ள இரண்டாவது சந்தேக நபர் சுமார் 40 வயது மதிக்கத்தக்கவர் ஆவார். அவர் கறுப்பு நிற, பருமனான உடல் அமைப்பைக் கொண்டுள்ளதுடன் 5 அடி 10 அங்குலம் வரையிலான உயரம் கொண்டவர் என பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி குறித்த நபர்கள் தொடர்பில் எவரேனும் சரியான தகவல் ஒன்றினை அறிந்தால் அதனை உடனடியாக 0718591753,  0718591770 அல்லது  0773291500 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு பொதுமக்களிடம்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

article_1467687438-b

article_1467687455-a

Related posts: