குடாநாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு கனடா உதவி!

Monday, March 20th, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கனடாவின் டொ​ரெண்டோ மாநகர சபைக்கும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் இடையில் அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் டொரெண்டோ மாநகர சபை சார்பாக நகர முதல்வர் John Tory யாழ்ப்பாண மாவட்டம் சார்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், யாழ்.மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று பிற்பகல் யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில், ரொராண்டோ மாநகரசபை சார்பாக பொருளாதார அபிவிருத்தி தொடர்பான ஆலோசகர் Michael Thompson, ஆலோசகர் Neethan Shan, சிரேஷ்ட ஆலோகர் கீர்த்தனா கமலவாசன் ஆகியோரும், யாழ்.மாவட்டம் சார்பாக வட மாகாண சபை அவைத்தலைவர், வட மாகாண அமைச்சர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஒப்பந்தத்தின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காணி அபிவிருத்தி, கல்வியை மேம்படுத்தல். சுகாதார வசதிகள். உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு டொரென்டோ மாநகர சபை முன்வந்துள்ளது.  குறித்த வசதிகளை ஏற்படுத்துவதற்கான உடன்படிக்கையின் போது உறுதியான உதவித் தொகை பற்றி வடமாகாண சபை முதலமைச்சர் குறிப்பிடவில்லை.

Related posts: