சிம்பாவே அதிதிகள் குழு – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு!
Wednesday, July 4th, 2018
சிம்பாவே தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள் குழுவினர் பாதுகாப்புச் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி திரு.கபில வைத்தியரத்னவை சந்தித்தனர்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் சிம்பாவே தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள் குழுவினர் எயர் வைஸ் மார்ஷல் மைக்கேல் டெட்ஸானி மோயோவின் தலைமையில் சந்தித்துள்ளனர்.
சர்வதேச ஆய்வு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர்கள் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோது இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எயர் வைஸ் மார்ஷல் மைக்கேல் டெட்ஸானி மோயோ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த சந்திப்பை நினைவுகூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டிஏஆர் ரணவக்கவும் கலந்துகொண்டார்.
Related posts:
நாட்டின் சகல பாடசாலைகளிலும் ஆளணி, பௌதிகவளங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – பிரதமர்!
இலங்கை மாணவர்களுக்கு ஜப்பான் புலமைப்பரிசில்கள்!
தேவையற்ற விதத்தில் அதிகமான ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் - நிறுவனங்களின் தலைவர...
|
|
|


